• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Mumbaikar: மாஸ் லுக்கில் பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!

Mumbaikar: மாஸ் லுக்கில் பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

  • Share this:
    பாலிவுட்டில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் படத்தின் மாஸ் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

    கோலிவுட்டில் பன்முகத் திறமையான நடிகராக திகழ்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவர் நிறைய படங்களில் கையெழுத்திட்டு வருகிறார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் அவரது தோற்றத்தை, தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.



    Theepetti Ganesan: குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மறைவு

    கையில் துப்பாக்கியுடன் ஒரு சிறுவனை கடத்திச் சென்ற படத்தைப் பகிர்ந்த விஜய் சேதுபதி, ‘#மும்பைக்கர்’ எனத் தலைப்பிட்டு சந்தோஷ் சிவனை குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இதில் விக்ராந்த் மாஸ்ஸி, தான்யா மணிக்தலா, சஞ்சய் மிஸ்ரா, சச்சின் கெடேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    ஒரிஜினல் மாநகரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் சுந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி, முனிஷ்காந்த், ஷா ரா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜாவேத் ரியாஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: