Home /News /entertainment /

மாஸ்டர் படத்துக்குப் பின் உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி!

மாஸ்டர் படத்துக்குப் பின் உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி!

நடிகர்  விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் படத்துக்காக தனது உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்சேதுபதி விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் கோடைவிடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. அதன்படி நானும் ரவுடி தான் படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவனுடன் மீண்டும் இணைந்துள்ளார் விஜய்சேதுபதி.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஆரம்பத்தில் இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படத்தை லலித் குமார் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் துவங்குவதற்கு முன்னதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




இந்நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் நடிகர் விஜய்சேதுபதி ஈடுபட்டிருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதற்காக அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு சிம்பு கொடுத்த ரியாக்‌ஷன் - அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Vijay sethupathi

அடுத்த செய்தி