Home /News /entertainment /

Vijay Sethupathi, Katrina Kaif: தள்ளிப்போன விஜய்சேதுபதி, கத்ரினா கைஃப் படம்

Vijay Sethupathi, Katrina Kaif: தள்ளிப்போன விஜய்சேதுபதி, கத்ரினா கைஃப் படம்

விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப்

விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப்

கோவிட் பாதிப்பில் இருந்து கத்ரினா கைஃப் மீண்டுவிட்டார். படப்பிடிப்பை தொடங்கலாம் என்றால் கால்ஷீட் பிரச்சனை.

    இன்றைய தேதியில் மோஸ்ட் வான்டட் நடிகர் இந்திய அளவில் யார் என்று பார்த்தால், அது விஜய்சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடிக்கிறார். இந்தியில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பைகர் திரைப்படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி தழுவல் தான் இது.

    இதனைத் தொடர்ந்து கத்ரினா கைஃபுடன் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். ஸ்ரீராம் ராகவன் இந்தியின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். ஏப்ரல் 15-ம் தேதி இந்தப் படத்தை தொடங்குவதாக இருந்தனர். அந்த நேரம், கத்ரினா கொரோனாவினால் பாதிக்கப்பட, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து கத்ரினா மீண்டுவிட்டார். படப்பிடிப்பை தொடங்கலாம் என்றால் கால்ஷீட் பிரச்சனை. விஜய்சேதுபதிக்கு வேறுபடங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. கத்ரினா சல்மான்கானின் டைகர் 3 படத்தில் நடித்தாக வேண்டும். இதனால், ஸ்ரீராம் ராகவன் படத்தை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

    இந்த இடைவெளியில் கத்ரினா கைஃப் டைகர் 3 படத்தில் நடிக்கிறார். சரி, விஜய்சேதுபதி...? தமிழில் மட்டும் ஒரு டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். நாளுக்கு 24 மணிநேர கமிட்மெண்டில் தீர கூடியதா அவரது பணி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay sethupathi, Katrina Kaif

    அடுத்த செய்தி