ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடைசி விவசாயி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கடைசி விவசாயி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கடைசி விவசாயி

கடைசி விவசாயி

இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அவரது பின்னணி இசையில் திருப்தி இல்லாத மணிகண்டன் வெளிநாடு சென்று அங்குள்ள கலைஞர்களை வைத்து படத்திற்கான பின்னணி இசையை அமைத்துக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மணிகண்டன் விவசாயிகளின் பிரச்சினையை பின்னணியாக வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் கடைசி விவசாயி. இதன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார்கள்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களை இயக்கிய மணிகண்டனின் புதிய திரைப்படம் கடைசி விவசாயி. 2018-ல் இந்த படத்திற்கான வேலைகளை தொடங்கினார். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. படம் தயாரான நிலையில் கொரோனா பெரும்தொற்று காரணமாக படத்தை திரையரங்கில் வெளியிடுவதா இல்லை ஓடிடியில் வெளியிடுவதா என நீண்ட குழப்பத்துக்கு ஆளானார் மணிகண்டன்.

தற்போது படத்தைத் திரையரங்கில் வெளியிடுவது என முடிவு செய்து வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார்கள். வரும் 11ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, காளிமுத்து, சுந்தர் முனீஸ்வரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வயதான ஒரு விவசாயி தான் படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அவரது பின்னணி இசையில் திருப்தி இல்லாத மணிகண்டன் வெளிநாடு சென்று அங்குள்ள கலைஞர்களை வைத்து படத்திற்கான பின்னணி இசையை அமைத்துக் கொண்டார்.

அதன் பிறகு பட விளம்பரங்களில் பாடல்கள் இளையராஜா என்றும் பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இளையராஜா சார்பில் மணிகண்டன் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு நடந்த பஞ்சாயத்துக்குப் பிறகு இப்போது கடைசி விவசாயி திரைப் படத்தின் விளம்பரங்களில் இளையராஜாவின் பெயர் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இசை சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்ட் ஹார்வி என குறிப்பிட்டுள்ளனர்.

கடைசி விவசாயி எடிட்டிங்கை அஜித்குமார் செய்துள்ளார். கலை இயக்கம் தோட்டாதரணி. மணிகண்டன் இதுவரை இயக்கிய மூன்று திரைப்படங்களும் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டவை. அந்தவகையில் கடைசி விவசாயி திரைப்படத்தின் மீதும் அனைவருக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனை படம் பூர்த்தி செய்யுமா என்பது பிப்ரவரி 11-ஆம் தேதி தெரிந்துவிடும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Actor Vijay Sethupathi