ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கும் விஜய் சேதுபதி படம்

ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கும் விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

காக்கா முட்டை மணிகண்டன் விஜய் சேதுபதி, யோகி பாபு நடிப்பில் எழுதி இயக்கியிருக்கும் படம் கடைசி விவசாயி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் செப்டம்பர் 9 திரையரங்குகளில் வெளியாகிறது.

அடுத்த நாள் துக்ளக் தர்பார் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. அன்றே அப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் சேதுபதியின் மற்றொரு திரைப்படமான அனபெல் சேதுபதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

விஜய் சேதுபதி படங்கள் ஓடிடி, தொலைக்காட்சி வெளியீடு என்று ரசிகர்களுக்கு சோகத்தை தரும்விதமாக இருக்க, ஒரு நற்செய்தியும் வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காக்கா முட்டை மணிகண்டன் விஜய் சேதுபதி, யோகி பாபு நடிப்பில் எழுதி இயக்கியிருக்கும் படம் கடைசி விவசாயி. விவசாயிகளின் பிரச்சனையை ஆத்மார்த்தமாக அணுகி காட்சிப்படுத்தியிருக்கும் படம் இது. இதனை சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதால் லாபம் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கடைசி விவசாயியை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளார் மணிகண்டன்.

Vijay Sethupathi Kadaisi Vivasayi retreats from OTT release, vijay sethupathi, vijay sethupathi movies, vijay sethupathi new movie shooting, vijay sethupathi shooting spot issues, vjs 46 movie, விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி படங்கள், விஜய் சேதுபதி படப்பிடிப்பு நிறுத்தம், விஜய் சேதுபதி படக்குழுவினர் திண்டுக்கல் தகராறு, kadaisi vivasayi, kadaisi vivasayi movie, கடைசி விவசாயி, விஜய் சேதுபதி கடைசி விவசாயி
கடைசி விவசாயி

லாபத்தை ரசிகர்கள் ஓட வைத்தால் அவர்களுக்கு இன்னொரு லாபம் காத்திருக்கிறது. ஓடிடிக்கு பதில் திரையரங்கில் கடைசி விவசாயியை கண்டு ரசிக்கலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vijay Sethupathi