'தலைவன் இருக்கின்றான்' படத்தில் இணையும் விஜய் சேதுபதி?

தேவர் மகன் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தலைவன் இருக்கின்றான்' படத்தில் இணையும் விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதி | கமல்ஹாசன்
  • Share this:
தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் உடன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, கதை பிடித்திருந்தால் மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கவும் தவறுவதில்லை. ரஜினிகாந்தின் பேட்ட, சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மா ரெட்டி, விஜய் உடன் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருருக்கும் விஜய்சேதுபதி அடுத்தபடியாக கமல்ஹாசன் உடன் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், இந்தப் படத்துக்கு பின்னர் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் தேவர் மகன் படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இதனிடையே சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி - கமல்ஹாசன் இருவரும் உரையாடினர். தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி - கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பதையே இந்த உரையாடல் மறைமுகமாக தெரிவிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது.

மேலும் கமல்ஹாசன் - விஜய்சேதுபதியின் இன்ஸ்டாகிராம் உரையாடலுக்கு தலைவன் இருக்கின்றான் என்று டைட்டில் வைக்கப்பட்டதும் இதற்காகத் தான் என்று பேசப்பட்டாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

படிக்க: கொரோனா: தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு






First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading