பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் இணைந்த விஜய் சேதுபதி

பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.

news18
Updated: December 5, 2018, 3:40 PM IST
பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் இணைந்த விஜய் சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி
news18
Updated: December 5, 2018, 3:40 PM IST
பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.

கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பியார் பிரேமா காதல் ஹிட் அடித்தது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரைஸா வில்சன் நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் கொடி இயக்கும் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் சித்தர் பாடும் பாடலாக உருவாகியுள்ளது.மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.Loading...
படத்தில் ஷில்பா மஞ்சுநாத், மா.கா.பா. ஆனந்த், பாலா சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய புரியாத புதிர் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமா? - ஆ.ராசா பதில் - வீடியோ

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...