புதிய கார் வாங்கிய ரசிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

காரை ரிப்பன் வெட்டி திறந்ததோடு, அகல்யவை அழைத்துக் கொண்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.

 • Share this:
  தொலைக்காட்சி தொகுப்பாளினியின் புதிய காரை ரிப்பன் வெட்டி திறந்து, அவரை அழைத்துக் கொண்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த வாரம் ’லாபம்’ மற்றும் ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இந்த வாரம் அனபெல்லா சேதுபதி என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

  இத்துடன் அவர் கைவசம் கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. தவிர சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

  இந்நிலையில் ஆதித்யா டிவி தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரை ரிப்பன் வெட்டி திறந்ததோடு, அகல்யவை அழைத்துக் கொண்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அகல்யா, ’எனது காரின் தொடக்க விழா. ரசிகனை ரசிக்கும் தலைவா மக்கள் செல்வன் விஜய் சேதுபதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: