• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சல்மான் கானுக்காக எழுதிய கதையில் விஜய் சேதுபதி?

சல்மான் கானுக்காக எழுதிய கதையில் விஜய் சேதுபதி?

சல்மான் கான் - விஜய் சேதுபதி

சல்மான் கான் - விஜய் சேதுபதி

தமிழில் விஜய் சேதுபதி நடித்தப் படங்கள் மாதத்துக்கு மூன்று வெளியாகிறது.

  • Share this:
    இந்தியின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீராம் ராகவன். இவர் இயக்கிய ஜானி கத்தார், பத்லாபூர், அந்தாதுன் படங்கள் முக்கியமானவை.

    கடைசியாக வெளியான அந்தாதுனை தெலுங்கில் மேஸ்ட்ரோ என்ற பெயரில் ரீமேக் செய்து சில தினங்கள் முன்பு வெளியிட்டனர். இதன் மலையாள ரீமேக்கான ப்ரம்மம் விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் அந்தகன் என்ற பெயரில் தியாகராஜன் இதனை ரீமேக் செய்துள்ளார்.

    ஸ்ரீராம் ராகவன் அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அவர் இரு இந்திப் படங்களில் நடிக்கிறார், மெர்ரி கிறிஸ்துமஸ் மூன்றாவது படம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் கத்ரினா கைஃபும் நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. 2021 பிப்ரவரியில் இந்தப் படம் குறித்து முதலில் அறிவிக்கப்பட்டது.

    இந்தப் படத்தின் கதையை சல்மான் கானை மனதில் வைத்து ஸ்ரீராம் ராகவன் எழுதியுள்ளார். கதை சல்மானுக்குப் பிடித்திருந்தது. ஆனால், சல்மான் படங்களின் வசூல் பல நூறு கோடிகள். அந்தத் தொகையை வசூலிக்க ஆட்டம் பாட்டம் நிறைந்த அடிதடி கதையில் நடிக்க வேண்டம். ஸ்ரீராம் ராகவனின் புத்திசாலித்தனமான த்ரில்லர் கதைகள் போதாது. இதன் காரணமாக சல்மான் கான் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது. அவருக்குப் பதில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழில் விஜய் சேதுபதி நடித்தப் படங்கள் மாதத்துக்கு மூன்று வெளியாகிறது. தெலுங்கிலும் அவர் நடிக்கிறார். இந்தியையும் விட்டு வைக்கவில்லை. படங்கள் மட்டுமின்றி ராஜ் & டிகே இயக்கும் புதிய வெப் தொடரிலும் விஜய் சேதுபதி பிரதான வேடம் ஏற்றுள்ளார். இதில் நாயகனாக ஷாகித் கபூர் நடிக்க, ராஷி கண்ணா, ரெஜினா ஆகியோர் உடன் நடிக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: