ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay Sethupathi: ஃபேமிலி மேன் இயக்குநர்களின் புதிய வெப் தொடரில் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: ஃபேமிலி மேன் இயக்குநர்களின் புதிய வெப் தொடரில் விஜய் சேதுபதி!

இந்த வெப்தொடரில் விஜய் சேதுபதி இணைந்து கொண்டதை அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

இந்த வெப்தொடரில் விஜய் சேதுபதி இணைந்து கொண்டதை அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

இந்த வெப்தொடரில் விஜய் சேதுபதி இணைந்து கொண்டதை அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தி பேமிலி மேன் வெப் தொடரை உருவாக்கி, இயக்கிய ராஜ் & டிகேயின் புதிய இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

  ஆந்திராவைச் சேர்ந்த ராஜ் நிதிமோரு, கிருஷ்ணன் டிகே ஆகியோர் ராஜ் & டிகே என்ற பெயரில் இந்தியில் உருவாக்கி, இயக்கிய வெப் தொடர் தி பேமிலி மேன். இந்தியாவில் தயாரான முக்கியமான வெப் தொடர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் இரண்டாவது சீஸனில் ஈழப்போராளிகளையும், அதன் தலைவரையும் தவறாக சித்தரித்ததாக சர்ச்சைகள் எழுந்தது நினைவிருக்கலாம். இவர்கள் தற்போது புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகின்றனர். இதில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அவர்கள் முயற்சிப்பதாக தி பேமிலி மேன் சீஸன் 2 வெளியான போது எழுதியிருந்தோம். தற்போது அது உண்மையாகியிருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Vijay Sethupathi in the new web series of The Family Man Directors, The Family Man 2 Web Series, the family man 2, த ஃபேமிலி மேன், அமேசான் ப்ரைம், the family man 2 controversy, the family man 2 amazon prime, த ஃபேமிலி மேன் சர்ச்சை, the family man raj & dk, vijay sethupathi in Raj & DK web series, vijay sethupathi web series, விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி வெப் சிரீஸ், விஜய் சேதுபதி வலைத்தொடர்
  ராஷி கண்ணா - விஜய் சேதுபதி

  இந்த புதிய வெப் தொடரையும் அமேசான் பிரைம் வீடியோவுக்காக இயக்குகிறார்கள். இந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாகித் கபூர் இதில் நடிக்கிறார். அவருடன் ராஷி கண்ணாவுக்கும் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. இந்த வெப்தொடரில் விஜய் சேதுபதி இணைந்து கொண்டதை அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

  தி பேமிலி மேன் வெப் தொடரில் ஈழப்போராளிகள் தலைவர் பாஸ்கரன் வேடத்தில் விஜய் சேதுபதியையே நடிக்க வைக்கவே ராஜ் & டிகே விரும்பினர். சின்ன வேடம் என்பதாலும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 படத்தில் நடிக்க எதிர்ப்பு வந்ததை மனதில் வைத்தும், அந்த வேடத்தை மறுத்தார் விஜய் சேதுபதி. அவருக்குப் பதில் மைம் கோபியை நடிக்க வைத்தனர். தங்களின் புதிய வெப் தொடரில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தே ஆவது என்று முடிவு செய்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஷாகித் கபூர் வெப் தொடர் ஒன்றில் நடிப்பது இதுவே முதல்முறை.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi