ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நிதி பிரச்னை.. கொரோனா.. 7 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ரிலீசாகும் 'இடம் பொருள் ஏவல்'!

நிதி பிரச்னை.. கொரோனா.. 7 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ரிலீசாகும் 'இடம் பொருள் ஏவல்'!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இப்படத்தை 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் இடம் பொருள் ஏவல் படத்தை இயக்கினார்.

  இப்படத்தை 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் அந்த நேரத்தில் ­ப­டத்­தைத் தயா­ரித்த திருப்­பதி பிர­தர்ஸ் நிறு­வ­னம் சில நிதிப் பிரச்சினையால் முடங்கியது. அத­னால் இப்­ப­டத்­தின் வெளியீட்டை தள்­ளிப்­போட்­ட­னர். பின்னர் கொரோனா தொற்று பரவியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ' isDesktop="true" id="825635" youtubeid="_k4h9hMeHto" category="cinema">

  இதற்கிடையே இடம் பொருள் ஏவல் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் கிட்டத்தட்ட 35 படங்கள் வெளியாகின. இந்நிலையில் நிதி பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, விரைவில் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் ஆகியப் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இடம் பொருள் ஏவல் படத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi