தொகுப்பாளர் லோகேஷை மருத்துவமனையில் சந்தித்து உதவிய விஜய் சேதுபதி!

தொகுப்பாளர் லோகேஷை மருத்துவமனையில் சந்தித்து உதவிய விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி
  • Share this:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷை நேரில் சந்தித்த விஜய்சேதுபதி, அவருக்கு மருத்துவ செலவை வழங்கியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்த 'நானும் ரௌடி தான்' திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு திடீரென ஸ்டோக் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது இடது கால், இடது கை செயலிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து அவரது நண்பர்கள் லோகேஷை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்காக நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷை நேரில் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி அவருக்கான மருத்துவ செலவையும் வழங்கியுள்ளார். அப்போது லோகேஷ் உடன் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் உரையாடும் வீடியோ ஒன்றும் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.மருத்துவமனையில் உடல் நலம் தேறி வரும் லோகேஷ் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ரூ.13 கோடி செலவு... அவரின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பது நோக்கமல்ல - மிஷ்கின் பற்றி விஷால் பரபரப்பு அறிக்கை
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading