நடிகர் விஜய் சேதுபதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு அமைதியாக உதவி செய்து வருவதாக பாண்டிச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வீரராகவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த விஜய் சேதுபதி, இயக்குநர் சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்தார். ரஜினிகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
தற்போது நயன்தாரா, சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், சீனு ராமசாமியின் மாமனிதன், வெற்றிமாறனின் விடுதலை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவர் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க சைலண்டாக உதவியிருப்பதாக பாண்டிச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வீரராகவன் தெரிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரராகவன், விஜய் சேதுபதி மக்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அமைதியாக உதவி வருவதாகவும், அவரின் ஆதரவுடன் செயல்படும் தனது அரசு சாரா அமைப்பான வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
TM Soundararajan 100th Birthday: சிங்கக் குரலோன் டி.எம்.சௌந்தர்ராஜனின் 100-வது பிறந்தநாள்!
இதையடுத்து விஜய் சேதுபதிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay sethupathi