ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay Sethupathi: 190 பேருக்கு தலா 1000 ரூபாய் - சத்தமில்லாமல் உதவிய விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: 190 பேருக்கு தலா 1000 ரூபாய் - சத்தமில்லாமல் உதவிய விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

கொரோனா ஊரடங்கில் எல்லோரையும் போலவே சினிமா பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சினிமா பத்திரிகையாளர்கள் 190 பேருக்கு தலா 1000 ரூபாய் அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

  சத்தமில்லாமல் உதவிகள் பல செய்கிறவர் விஜய் சேதுபதி. சிலரைப் போல் பத்திரிகையாளர்களை கண்டால் விலகிச் செல்லாமல் பெயர் சொல்லி அழைத்து பழகக்கூடியவர். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் பத்திரிகையாளர் தொடர்பு கொள்ளும் ஒருசில நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

  கொரோனா ஊரடங்கில் எல்லோரையும் போலவே சினிமா பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். படங்கள் இல்லை, படப்பிடிப்புகள் இல்லை, விழாக்களோ, நிகழ்ச்சிகளோ ஏதுமில்லை. இந்நிலையில், சுமார் 190 பத்திரிகையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அளித்துள்ளார் விஜய் சேதுபதி. வழக்கம் போல அவர் இதை யாரிடமும் சொல்லவில்லை. உதவித் தொகை பெற்றுக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் இணையத்தில் அதனை பகிர்ந்த பிறகே இந்த உதவி வெளியுலகுக்கு தெரிய வந்தது.

  தவிர, விஜய் சேதுபதி நடித்திருக்கும் பல படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மலையாளத்தில் நடித்திருக்கும் 19(1)(a) ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. லாபம், மாமனிதன் படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இது தவிர மாநகரத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் படத்திலும், காந்தி டாக்கீஸ் என்ற மற்றுமொரு இந்திப் படத்திலும் நடிக்கிறார். தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர், முகிழ், காத்துவாக்குல ரெண்டு காதல், வெற்றிமாறனின் விடுதலை உள்பட பல படங்கள் தயாரிப்பில் உள்ளன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi