அயர்ன் மேன் மாதிரி பேசனும் ஷில்பா மாதிரி பேசக்கூடாது: விஜய்சேதுபதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அவெஞ்சர்ஸ்ல நீங்க ஸ்டார்க் மாதிரி பேசனும் ஷில்பா மாதிரி பேசக்கூடாது என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

news18
Updated: April 5, 2019, 1:50 PM IST
அயர்ன் மேன் மாதிரி பேசனும் ஷில்பா மாதிரி பேசக்கூடாது: விஜய்சேதுபதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
விஜய் சேதுபதி
news18
Updated: April 5, 2019, 1:50 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரில் அயர்ன் மேன்-க்கு டப்பிங் பேசி, ரசிகர்களிடம் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் விஜய் சேதுபதி.

அவெஞ்சர்ஸ் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதற்கு முன்னர் வெளியான அவெஞ்சர் 3 பாகங்களும் வசூலில் சக்கைப்போடு போட்டன. இதையடுத்து அவெஞ்சர்ஸ் படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்-மேன் என பல சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ்.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல் பிளாக் விடோ கதாப்பாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார்.



இவர்களுடைய குரல் மார்வெல் கதாப்பாத்திரங்களுக்கு சரியாக பொருந்தவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனார்.

விஜய் சேதுபதியின் குரல் அயர்ன் மேன் கேர்டருக்கு பொருந்தவில்லை என்றும் பழைய குரல் தான் சரியாக இருந்தது என்றும் பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.






அயர்ன் மேனும் நான் தான் தானோஸும் நான்தான்: விஜய் சேதுபதி கலக்கல் பதில்!


 

நம் ஆட்கள் மோசம்: அவெஞ்சர்ஸ் ட்ரெய்லர் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்!


Also watch






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:


First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...