விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது - தமிழக அரசு அறிவிப்பு

கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது - தமிழக அரசு அறிவிப்பு
விஜய் சேதுபதி
  • News18
  • Last Updated: February 28, 2019, 8:29 PM IST
  • Share this:
நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கருணாநிதி, முரசொலி மாறன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வ நாதன், இளையராஜா உள்ளிட்ட 1,079 கலைஞர்களுக்கு இதுவரை கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த 2010 மே மாதம் நடந்த விழாவில் அனுஷ்கா, தமன்னா, ஆர்யா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட 26 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.


தற்போது 2011- ஆம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2017-ம் ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ளார். மேலும் குட்டி பத்மினி, பிரசன்னா, சூரி, நடிகர் சசிகுமார், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், சந்தானம் , யுவன்சங்கர் ராஜா, பிரியாமணி, சிங்கமுத்து, பொன்வண்னன், புலியூர் சரோஜா, நடிகர் கார்த்தி உள்ளிட்ட 201 கலைவித்தகர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: February 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்