• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி

திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

  • Share this:
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்காக, கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பையனூரில் 96 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதில், பெப்சி (திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பு) தொழிலாளர்களுக்கு 50 ஏக்கர், படப்பிடிப்பு அரங்கத்துக்கு 15 ஏக்கர், தயாரிப்பாளர் சங்கத்துக்கு 10 ஏக்கர், சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கர் மற்றும் பொது பகுதியாக நிலங்கள் பிரிக்கப்பட்டன. அதில், 9 கோடி ரூபாய் மதிப்பில் படப்பிடிப்புத்தளம் கட்டப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்கட்டமாக 1,000 குடியிருப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதற்கான வீடுக்கட்டும் பணிகளும் தற்போது துவங்கவுள்ளன. இதுகுறித்து, ஏற்கனவே இயக்குநர் செல்வமணி கூறும்போது, “பையனூரில் அரசு வழங்கியுள்ள நிலத்தில், 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடியும்.

    முதல்கட்டமாக 1000 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட இருக்கிறோம். அனைத்து நடிகர்கள், தொழிற்சாலைகள் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் அமைத்து திரைப்பட நகரமாக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் பணிக்கு நடிகர் விஜய் சேதுபதி 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: