பேட்ட: ஒரு வார்த்தையில் விவரித்த விஜய்சேதுபதி

நானும் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பணிபுரிவது முடிவற்றது. அவர் என்மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பார். எங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அதையும் தாண்டி எங்களுக்கு இடையில் இருக்கும் அன்பு இருக்கும்.

news18
Updated: January 9, 2019, 1:45 PM IST
பேட்ட: ஒரு வார்த்தையில் விவரித்த விஜய்சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி
news18
Updated: January 9, 2019, 1:45 PM IST
‘பேட்ட’ ரஜினிகாந்துடைய படம் என்று வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது.

படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்களின் பேட்டியை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கேள்வியும் பதிலும் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. அவரிடம் மூன்று கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில் முதலாவதாக பேட்ட படப்பிடிப்பின்போது நடந்த முக்கியமான தருணங்கள் என்ன? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நானும் ரஜினிகாந்தும் படப்பிடிப்பின் போது 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்து பேசினோம். அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம்” என்றார்.

மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
Loading...
இந்த கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது என்று நினைக்கிறேன். நானும் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பணிபுரிவது முடிவற்றது. அவர் என்மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பார். எங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அதையும் தாண்டி எங்களுக்கு இடையில் இருக்கும் அன்பு இருக்கும். அவர் எப்போதும் சர்ப்ரைஸ் கொடுப்பார்.

பேட்ட படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் விவரிக்க முடியுமா?

ரஜினிகாந்தின் படம்.

இவ்வாறு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை - வீடியோ

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...