ஹோம் /நியூஸ் /entertainment /

துபாய் எனக்கு 2வது தாயகம்... விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

துபாய் எனக்கு 2வது தாயகம்... விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான், பெரிய லட்சியங்களுடன் 2000 ஆம் ஆண்டு துபாய்க்கு வந்தேன். இங்கு வந்த பிறகு இதை வெளிநாடாக உணராமல், எனது 2-வது தாயகமாக உணர்ந்தேன். : விஜய் சேதுபதி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

செல்வாக்கு மிகுந்த நட்சத்திரம் என்ற விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு துபாயில் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் துபாயை தனது 2- வது தாயகமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். சினிமாவுக்கு வரும் முன்பு அவர் துபாயில் 3 ஆண்டுகள் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஹிட் படங்களை கொடுத்து சினிமா ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்த கேரக்டர் கொடுக்கப்பட்டாலும் அதில் தனக்கென உள்ள திறமையை வெளிப்படுத்தி, பாராட்டை சர்வ சாதாரணமாக பெறுபவர் விஜய் சேதுபதி.

அவரின் அபாரமான நடிப்பாற்றல் காரணமாக இந்தியிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. தமிழில் கமல் நடிக்கும் விக்ரம், காத்துவாக்குல 2 காதல், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் விஜய்சேதுபதி கைவசம் உள்ளன. இந்த நிலையில் செல்வாக்குமிக்க நடிகர் என்ற விருது துபாயில் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Also Read : நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி

துபாயில் தனியார் நட்சத்திர ஓட்டலில் சர்வதேச புரோமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 50-வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்தான் அவருக்கு விருது அளிக்கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்டு விஜய்சேதுபதி பேசுகையில், ''நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான், பெரிய லட்சியங்களுடன் 2000 ஆம் ஆண்டு துபாய்க்கு வந்தேன். இங்கு வந்த பிறகு இதை வெளிநாடாக உணராமல், எனது 2-வது தாயகமாக உணர்ந்தேன்.

Also Read : ஐந்து மொழிகளில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்- ரசிகர்கள் உற்சாகம்

இங்கு 3 ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு சென்னைக்கு சென்றேன். பின்னர் திருமணம் முடித்து சினிமாவில் நடித்தேன். சினிமாவில் எனக்கு கிடைத்த வெற்றிகள் ஒரு விபத்தாக நடந்த முடிந்தன. சென்னையில் குடியேறிய பின்பும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளுக்காக நான் துபாய் வந்துள்ளேன்.

இங்கு வரும்போதெல்லாம் நான் முன்பு வசித்த பகுதியை சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்'' என்று பேசினார்

First published:

Tags: Vijyay Sethupathi