Home /News /entertainment /

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மேல்முறையீடு

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மேல்முறையீடு

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

அவதூறு வழக்கை சைதப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் எனava கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி என்பவரும் பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரத்தில், விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.



    சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், பெங்களூருவில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அந்த தாக்குதல் புகாரை குற்றவியல் புகாரின் கீழ் சென்னையில் விசாரிக்க வரம்பு இல்லை எனக்கூறி ரத்து செய்தது. அதேவேளையில் அவதூறு வழக்கை சைதப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

    பிரபல பாலிவுட் நடிகையிடம் வாய்ப்பை இழந்த சமந்தா?



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Supreme court, Vijay sethupathi

    அடுத்த செய்தி