Vijay Sethupathi: துக்ளக் தர்பாரை தொடர்ந்து ஓடிடிக்கு தயாராகும் மற்றுமொரு விஜய் சேதுபதி படம்!

Vijay Sethupathi: துக்ளக் தர்பாரை தொடர்ந்து ஓடிடிக்கு தயாராகும் மற்றுமொரு விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி

இதில் தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால், கேரளாவில் வசிக்கும் எழுத்தாளர் வேடம் விஜய் சேதுபதிக்கு.

  • Share this:
    கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதன் ஆவேசம் எப்போது அடங்கும், தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ஓடிடி.

    சின்னப் படங்களை ஓடிடிக்கு வழங்குங்கள். பெரிய படங்களை திரையரங்கில் வெளியிடுங்கள் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். நமது தொழில் நசிந்து விடும் என்ற கவலை. ஆனால், கடன் சுமை அழுத்துகையில் யார் யாரை தடுக்க இயலும்?
    விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். இப்போது மேலுமொரு படமும் ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகிறது.

    மலையாளத்தில் மார்க்கோனி மத்தாய் படத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி, அடுத்து 19 (1)(a) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்து என்பவர் இயக்கியுள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால், கேரளாவில் வசிக்கும் எழுத்தாளர் வேடம் விஜய் சேதுபதிக்கு. அவரே தமிழ் கலந்த மலையாளத்தில் சொந்த குரலில் பேசியுள்ளார். நித்யா மேனன், இந்திரஜித் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    விஜய் சேதுபதியின் சட்டையர் நடிப்பு இந்த எழுத்தாளர் வேடத்துக்கு தேவைப்பட்டதால் அவரை நடிக்க வைத்ததாக இயக்குனர் இந்து கூறியுள்ளார். ஆனால், வழக்கமான விஜய் சேதுபதி படமாக இது இருக்காது என்று நம்பிக்கையும் அளித்துள்ளார். இந்தப் படம் முடிவடைந்திருக்கும் நிலையில், ஓடிடியில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. கொரோனா அலை எப்போது தணியும், எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பது தெரியாத நிலையில் இந்த முடிவை தயாரிப்பு தரப்பு எடுத்திருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: