சிவகார்த்திகேயனுடன் இணைந்த விஜய்சேதுபதி... எதற்காக தெரியுமா?

சிவகார்த்திகேயனுடன் இணைந்த விஜய்சேதுபதி... எதற்காக தெரியுமா?
சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி
  • Share this:
வளர்ந்து வரும் நடிகர் ஒருவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதற்காக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் இணைந்துள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களிடம் அறிமுகமான ரியோ ராஜ் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் ஹீரோவானார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதை அடுத்து பாணா காத்தாடி பட இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்தப் படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.


பயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்துக்கு போக்கிரி படத்தில் வடிவேலு பேசி பிரபலமான ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற வசனத்தை டைட்டிலாக வைத்துள்ளது படக்குழு. கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்து நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர். அதற்கான அறிவிப்பை ரியோ உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க: வைரலாகும் 'வலிமை' அஜித்தின் புதிய புகைப்படங்கள்!
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading