முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'அரண்மனை 4' - முதன்முறையாக கைகோர்க்கும் விஜய் சேதுபதி - சந்தானம்

'அரண்மனை 4' - முதன்முறையாக கைகோர்க்கும் விஜய் சேதுபதி - சந்தானம்

அரண்மனை 4 படத்துக்காக இணைந்த விஜய் சேதுபதி, சுந்தர்.சி, சந்தானம்

அரண்மனை 4 படத்துக்காக இணைந்த விஜய் சேதுபதி, சுந்தர்.சி, சந்தானம்

இந்த நிலையில் மீண்டும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பேய் பட டிரெண்ட் பீக்கில் இருந்த போது ராகவா லாரன்ஸின் காஞ்சனா சீரிஸ் ஒருபக்கம், சுந்தர்.சியின் அரண்மனை சீரிஸ் பக்கம் என அடுத்தடுத்து வெளியாகி சூப்பர் ஹிட்டாகின. இதில் அரண்மனை படத்தின் 3வது பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியாகியிருந்தது. சுந்தர்.சியின் காஃபி வித் காதல் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் மீண்டும் அரண்மனை படத்தை கையிலெடுத்திருக்கிறார்.

அரண்மனை படத்தின் 4 ஆம் பாகமாக உருவாகும் இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய் சேதுபதியும் சந்தானமும் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அரண்மனை முதல் பாகத்தில் காமெடியனாக நடித்திருந்த சந்தானம் அடுத்து ஹீரோவாகிவிட்டதால் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் சந்தானம் தங்களது பிறந்த நாளை கொண்டாடினர். இதனை முன்னிட்டு அரண்மனை 4 படத்துக்காக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். சுந்தர்.சி இயக்கத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இதர நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Santhanam, Actor Vijay Sethupathi, Sundar.C