விஜய் சேதுபதி - காத்ரீனா கைஃப் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதானா?

விஜய் சேதுபதி - காத்ரீனா கைஃப் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதானா?

கத்ரினா கைஃப் | விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி - காத்ரீனா கைஃப் நடிக்க இருக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தியில் அமீர் கான் உடன் லால் சிங் சத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி கால்சீட் பிரச்னை காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி ஹிட் அடித்த ‘மாநகரம்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை சந்தோஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் அத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் விஜய் சேதுபதி.

அதைத்தொடர்ந்து அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காத்ரீனா கைஃப் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இந்தப் படத்துக்கு மேரி கிறிஸ்துமஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Ajith: சைக்கிள் பயணத்தில் ஆர்வம் காட்டும் அஜித் - லேட்டஸ்ட் போட்டோஸ்

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார்.
Published by:Sheik Hanifah
First published: