க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

படத்தைப் பார்த்த ஜிப்ரான் அறம் படத்தோடு ஒப்பிட்டு பாராட்டியிருந்தார்.

க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
க/பெ.ரணசிங்கம்
  • Share this:
க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவகளுடன் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படம் குறித்து கூறிய ஜிப்ரான், “படம் பார்த்து விட்டு, பின்னணி இசைக்கான பணிகளைத் தொடங்குகிறேன். 'அறம்' படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.




இறுதிக்கட்ட பணிகளில் இறங்கியிருக்கும் படக்குழு தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.








First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading