சினிமாவுக்கு முன்பே சீரியலில் நடித்த விஜய் சேதுபதி - வீடியோ

விஜய் உடன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

சினிமாவுக்கு முன்பே சீரியலில் நடித்த விஜய் சேதுபதி - வீடியோ
விஜய் சேதுபதி
  • Share this:
சினிமாவுக்கு முன்னர் விஜய் சேதுபதி நடித்த சீரியலின் வீடியோ ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, இன்று தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கதைக்குத் தேவைப்பட்டால் குணச்சித்திர நடிகராக நடிப்பது, முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிப்பது என தனக்கான தனிப்பாதை அமைத்து பயணிக்கும் விஜய் சேதுபதி, ஆரம்பத்தில் துணை நடிகராகவும் ஏன் கூட்டத்தில் நிற்கும் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் கூட நடிக்கத் தவறவில்லை.


முன்னணி நடிகர் என்ற இடம் விஜய் சேதுபதிக்கு எளிதில் கிடைக்கவில்லை. அதற்கே சுமார் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக அவரே சில மேடைகளில் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆரம்பத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெண் என்ற டிவி சீரியலில் நடித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அத்தொடரின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது கவனம் பெற்று வருகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகை சீதா, டெல்லி கணேஷ், டாக்டர் ஷர்மிளா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading