'மாஸ்டர்' மட்டும் தான் மிஸ்ஸிங்... விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கிடைத்த பொங்கல் பரிசு!

'மாஸ்டர்' மட்டும் தான் மிஸ்ஸிங்... விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கிடைத்த பொங்கல் பரிசு!
லாபம் படத்தில் விஜய் சேதுபதி
  • Share this:
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் உள்ளிட்ட படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் லுக்கில் அவர் இடம்பெறுவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நனவாகவில்லை. மாறாக அவருக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்துள்ளது மாஸ்டர் படக்குழு.




ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் செகண்ட் லுக், மூன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.





அதுமட்டுமின்றி எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய்சேதுபதி புதுவிதமான கெட்-அப்பில் தோன்றியுள்ளார்.



இதனிடையே தனது துக்ளக் தர்பார் படத்தின் படக்குழுவினருடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடிய விஜய் சேதுபதி, யாதும் ஊரே யாவரும் கேளிர் படக்குழுவுடனும் இணைந்து பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: விக்ரம் வேதா இயக்குநருடன் கரம் கோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
First published: January 16, 2020, 8:07 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading