பொள்ளாச்சி விவகாரத்தில் காட்டமாக கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி

Web Desk | news18
Updated: March 23, 2019, 7:45 PM IST
பொள்ளாச்சி விவகாரத்தில் காட்டமாக கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி
Web Desk | news18
Updated: March 23, 2019, 7:45 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா என்று நடிகர் விஜய்சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரண்ய காண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை சமந்தா, மிஷ்கின், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் மார்ச் 29-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தப்ப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் நடிகர் விஜய்சேதுபதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, “இந்த விவகாரத்தில் சிலர் பெண்களை குறை சொல்கிறார்கள். ஆனால் அது மிகவும் தவறானது. என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? அங்கே நடந்தது தவறுதான் என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியும். வெளியான வீடியோவில் கதறிய பெண்ணின் குரலை என்னால் 10 விநாடிகள் கூட கேட்க முடியவில்லை. மனது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறினார்.

குடும்பத்திற்கு 10 லிட்டர் பிராந்தி கொடுப்பேன்... சுயேட்சை வேட்பாளரின் வாக்குறுதி - வீடியோ

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...