கேலி பேசியதற்காக மன்னிப்புக் கேட்ட விஜய்!

கேலி பேசியதற்காக மன்னிப்புக் கேட்ட விஜய்!
விழா மேடையில் விஜய்
  • News18
  • Last Updated: November 2, 2019, 5:41 PM IST
  • Share this:
பிகில் திரைப்படத்தில் நடிகர் ரோபோ சங்கரின் மகளை உருவக்கேலி செய்யும் வகையில் பேசியதற்காக நடிகர் விஜய் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிகை இந்துஜா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உட்பட பலர் நடித்துள்ளனர். இவர்களில் இந்திரஜா நடிகர் ரெபோ சங்கரின் மகள் ஆவார்.

உடல் எடை அதிகமாக இருக்கும் இந்திரஜாவை படத்தில் குண்டம்மா என்று ஒரு காட்சியில் பேசியிருப்பார் நடிகர் விஜய். அதற்காக இந்திரஜா வருந்தும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். இந்தக் காட்சிகள் பெண்களை அவமதிப்பாக இருப்பதாகவும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் இந்திரஜா அளித்துள்ள பேட்டியில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். அதில், என்னை அப்படி பேசுவதற்கு நடிகர் விஜய் மிகவும் தயங்கினார். படத்திற்கு தேவைப்பட்டதால் அப்படி பேசி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாகவே நடித்தேன்.

அந்தக் காட்சி படமாக்கப்பட்ட பின்னர் என்னிடம் வந்து குண்டம்மா என்று நான் சொன்னது மனதைக் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்க என்று பணிவுடன் மன்னிப்பு கோரினார் விஜய். நான் உணர்ச்சிவசப்பட்டு விஜய் சாரிடம் கேள்வி எழுப்பும் போது அருகிலிருந்த மேசையை உடைக்கப்போகிறேன் என்பது விஜய்யிடம் அட்லீ சொல்லவில்லை. அதனால் நான் நடிப்பதைப் பார்த்த விஜய் அதிர்ச்சியடைந்தார்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: யார் இந்த சிங்கப்பெண்கள்?

First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்