நம்ப வச்சு ஏமாத்திட்டிங்களே ‘மாஸ்டர்’ - ஏக்கத்தில் ரசிகர்கள்!

நம்ப வச்சு ஏமாத்திட்டிங்களே ‘மாஸ்டர்’ - ஏக்கத்தில் ரசிகர்கள்!
மாஸ்டர்
  • Share this:
மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதைத்தொடர்ந்து டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

லோகேஷ்- கனகராஜ் இயக்கம் விஜய் உடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி என இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 31-ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.
அதனால் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இதனிடையே மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக்கில் விஜய்சேதுபதி இருப்பார் என்று தகவல்கள் வெளிவரத் தொடங்கின. எனவே விஜய்சேதுபதி ரசிகர்களும் செகண்ட் லுக் போஸ்டரைக் காண காத்திருந்தனர்.

ஆனால் இன்று மாலை 5 மணிக்கு வெளியான செகண்ட் லுக் போஸ்டரிலும் நடிகர் விஜய் சைலென்ஸ் சொல்லும் விதமாக கருப்புநிற உடையில் தோன்றியிருந்தார். ஸ்டைலான இந்தப் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினாலும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏமாத்திட்டிங்களே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.


மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செகண்ட் லுக் போஸ்டர் பதிவின் கீழ் தங்களது ஏக்கத்தை கமெண்டுகளாக பதிவிட்டுள்ளனர்.மேலும் பார்க்க: ரஜினிகாந்த் முதல்... பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்!
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்