உஷ்ஷ்...அமைதி காக்கச் சொல்லும் விஜய் - ’மாஸ்டர்’ செகண்ட் லுக் ரிலீஸ்

உஷ்ஷ்...அமைதி காக்கச் சொல்லும் விஜய் - ’மாஸ்டர்’ செகண்ட் லுக் ரிலீஸ்
மாஸ்டர் செகண்ட் லுக்
  • Share this:
மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்திருக்கும் நிலையில், ரிலீசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏரியாக்களிலும் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்தப் போஸ்டரில் நடிகர் விஜய்சேதுபதி தோன்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தப் போஸ்டரிலும் நடிகர் விஜய் மட்டுமே கருப்பு நிற உடையில் தோன்றியுள்ளார். நாளை விஜய்சேதுபதியின் பிறந்த நாளன்றாவது அவரது போஸ்டர் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

மேலும் படிக்க: தனுஷின் ‘பட்டாஸ்' எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்