விஜய்யின் பெயருடன் இணையத்தில் கசிந்த மாஸ்டர் ஐடி கார்டு..!

இத்திரைப்படத்தில் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் பெயருடன் இணையத்தில் கசிந்த மாஸ்டர் ஐடி கார்டு..!
விஜய்
  • Share this:
மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் கேரக்டர் பெயர் அடங்கிய ஐடி கார்டு இணையத்தில் கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் விஜய்யின் கதாபாத்திரப் பெயர் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கெனவே இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக கூறப்பட்டது. அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.

விஜய்யின் கதாபாத்திரப் பெயரை படத்துக்கு தலைப்பாக வைக்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில் பின்னர் மாஸ்டர் என்று படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஜேம்ஸ் துரைராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் அணியும் காலேஜ் ஐடி கார்டு தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.


கல்லூரியின் பெயரோடு வெளியாகியிருக்கும் அந்த ஐடி கார்டில் விஜய் மாணவர் அஷோசியேஷன் டீன் பொறுப்பில் நடித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இத்திரைப்படத்தில் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

மேலும் படிக்க: திட்டமிட்ட நாளில் திரைக்கு வரும் 'மாஸ்டர்' - படக்குழு!
First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading