விஜய்யின் பிகில்... முதல் நாள் வசூல் ரிப்போர்ட்...!

விஜய்யின் பிகில்... முதல் நாள் வசூல் ரிப்போர்ட்...!
நடிகர் விஜய்
  • News18
  • Last Updated: October 26, 2019, 4:30 PM IST
  • Share this:
பிகில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் நேற்று வெளியானது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிகில் திரைப்படம் நேற்றைய முதல்நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முதல்நாள் என்பதால் தமிழகம் முழுவதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக பிகில் படம் ஓடியதால் இந்த வசூலைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் படத்தின் வசூல் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: இசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First published: October 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading