ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு இசை வெளியீட்டு விழா: அப்பா - அம்மாவை கைகொடுத்து வரவேற்ற விஜய் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி?

வாரிசு இசை வெளியீட்டு விழா: அப்பா - அம்மாவை கைகொடுத்து வரவேற்ற விஜய் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி?

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா

Varisu Vijay: தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடிகர் விஜய் பேசிக்கொள்வதில்லை எனக் கூறப்பட்ட நிலையில் பெற்றோரை விஜய் வரவேற்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

Varisu Vijay: தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் வாரிசுடன் நடிகர் அஜித்தின் துணிவும் தெலுங்கில் சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' மற்றும் பாலகிருஷ்ணாவின் 'விர சிம்ஹா ரெட்டி' படமும் வெளியாவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் 'தோழா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வம்சி மீண்டும் தனது மேஜிக்கை நிகழ்த்துவார் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். வாரிசு படத்துக்கு முதன்முறையாக தமன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மேலும் 3 பாடல்கள் வெளியாகின்றன.

இதையும் படிக்க |  விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது தடியடி - வைரலாகும் பரபரப்பு வீடியோ

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, குஷ்பு, சரத்குமார், பிரபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது வாரிசு இசை வெளியீட்டு விழா நடைபெற்றுவரும் நிலையில் விஜய்யின் என்ட்ரி போட்டோ வைரலாகிவருகிறது. இந்த நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ள தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோரை கைகொடுத்து விஜய் வரவேற்றார். தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடிகர் விஜய் பேசிக்கொள்வதில்லை எனக் கூறப்பட்ட நிலையில் பெற்றோரை விஜய் வரவேற்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Varisu