விஜய் வெளியிட்ட பிகில் எமோஜி... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் வெளியிட்ட பிகில் எமோஜி... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிகில் திரைப்படம் உலகம் முழுவது முதல் 5 நாட்களில் 200 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது   
  • News18
  • Last Updated: October 23, 2019, 2:20 PM IST
  • Share this:
பிகில் படத்துக்காக எமோஜியை வெளியிட்டார் நடிகர் விஜய் 

நடிகர் விஜய்-அட்லி கூட்டணியில் தீபாவளி விருந்தாக வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளில் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிகில் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில்  முன்பதிவு துவங்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பிகில் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இந்நிலையில் பிகில் படத்திற்கான எமோஜியை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பிகில் எமோஜி வெளியானது முதல் ரசிகர்கள் அதை ட்விட்டரில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்

#BIGIL #PodraVediya #BigilDiwali #வெறித்தனம் #தளபதி63 உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜி வழங்கப்பட்டுள்ளது.





Also watch

First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading