விஜய்யின் அடுத்தப்படமான தளபதி 66 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் விஜய்யின் 65-ஆவது திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. பூஜையை தொடர்ந்து பாடல் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து, ஐந்து நாட்கள் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது. நடிகர்கள் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஒரு பாடல் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இதன் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் தமன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
நடுவர் குழு பாரபட்சமானது - விஜய் டிவியை வெளுத்து வாங்கி சவால் விட்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்தத் திரைப்படத்திற்காக தமிழ் மொழிக்கு விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளமும், தெலுங்கு மொழிக்கு 40 கோடி சம்பளமும் என மொத்தம் 120 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற அந்தஸ்தை விஜய் அடைந்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.