விஜய் கொடுத்த உபசரிப்பு... வியந்த திரையரங்க உரிமையாளர்...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜய் கொடுத்த உபசரிப்பு... வியந்த திரையரங்க உரிமையாளர்...!
திரையரங்க உரிமையாளருடன் விஜய்
  • News18
  • Last Updated: March 13, 2019, 2:10 PM IST
  • Share this:
நடிகர் விஜய் திரையரங்க உரிமையாளர் ஒருவருக்கு அளித்த உபசரிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் நடிகர் விஜயின் உபசரிப்பு குறித்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கவுதமன் கருத்து கூறியுள்ளார்.

அதில், நான் இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யை கடந்த நவம்பர் 28-ம் தேதி அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அவருடன் ஒருமணி நேரம் செலவிட்டேன். அப்போது அவர் என்னிடம் க்ரீன் டீ வேண்டுமா என்று கேட்டு அவரே அதை தயார் செய்தும் கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.

இந்த எளிமை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இதுவே அவரை வெற்றிக்கு அழைத்துச் செல்வதாகவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தனது திரையரங்குக்கு விஜயை அழைத்ததாகவும் அதற்கு அவர் புன்னகையை பதிலாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மைக்செட் மணிமாறன் - தினசரி நகைச்சுவை நிகழ்ச்சி - வீடியோ

First published: March 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்