விஜய் குறித்த எதிர்மறையான ஹேஷ்டேக் - சிபிராஜ் கோபம்

news18
Updated: July 31, 2019, 11:28 AM IST
விஜய் குறித்த எதிர்மறையான ஹேஷ்டேக் - சிபிராஜ் கோபம்
சிபிராஜ் | விஜய்
news18
Updated: July 31, 2019, 11:28 AM IST
விஜய் குறித்த எதிர்மறையான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வரும் நிலையில் நடிகர் சிபிராஜ் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ரசிகர்களும் ஏராளம். பட அறிவிப்புகள், ட்ரெய்லர் வெளியீடு என ஒவ்வொரு சிறு நகர்வையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி மகிழும் ரசிகர்கள், பல நேரங்களில் ட்விட்டர் போரையே உருவாக்கி விடுகின்றனர்.

அஜித்தின் நேர்கொண்டபார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் #ஆகஸ்ட் 8பாடைய கட்டு என்ற ஹேஷ்டேக்கை எதிர்தரப்பினர் ட்ரெண்ட் செய்ய, பதிலுக்கு #ரிப்ஆக்டர்விஜய் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அஜித், விஜய் ரசிகர்களின் இந்த செயல் பலரையும் வருத்தமடையச் செய்துள்ளது.


இந்நிலையில் தற்போது #LongLiveVIJAY என்ற பாசிட்டிவ்வான ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இதுகுறித்து கருத்து பதிவிட்டிருக்கும் நடிகரும், விஜய் ரசிகருமான சிபிராஜ், “எதிர்மறையான ஹேஷ்டேக்கை சில முட்டாள்கள் டிரெண்ட் செய்வதை பார்க்கும்போது எரிச்சலாக உள்ளது. இதுபோன்ற செயல்கள் அந்த மனிதரை வலிமைப்படுத்தும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் முட்டாள்களே” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...