லோகேஷ் கனகராஜ் குரலில் மிமிக்ரி செய்த விஜய் - வியந்துபோன இயக்குநர்!

லோகேஷ் கனகராஜ் குரலில் மிமிக்ரி செய்த விஜய் - வியந்துபோன இயக்குநர்!
விஜய்
  • Share this:
லோகேஷ் கனகராஜ் குரலில் நடிகர் விஜய் மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார்.

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக தளபதி 64 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் ஆன்ட்ரியா, விஜே ரம்யா, சவுந்தர்யா, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, கௌரி கிஷன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படிக்க : கமல் படத்தின் ரீமேக்கா?... அனிருத் இசையில் பாடும் விஜய் - ‘தளபதி 64’ நியூ அப்டேட்!

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் லோகேஷ் கனகராஜுடன் பணிபுரியும் அவரது நண்பரும் ஆடை பட இயக்குநருமான ரத்னகுமார் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புகைப்படங்களைப் பார்க்க கிளிக் செய்க: ‘தளபதி 64’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!

Loading...

அதில் பயணத்தாலும், மக்களை சந்திப்பதாலும் டெல்லியில் கதை குறித்த பணிகளில் இன்று ஈடுபடவில்லை. ஆனால் இது நடந்தது. மச்சி ஹேப்பி பர்த்டேடா. இப்படித்தான் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் குரலில் பேசி வாழ்த்தினார். பயனுள்ள வாழ்க்கை தான். அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

இந்தவாரம் வெளியாகும் தமிழ்ப் படங்கள் என்னென்ன தெரிஞ்சுக்கணுமா கிளிக் பண்ணுங்க!


First published: November 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com