• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்

தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்

நேற்று வெற்றி பெற்ற இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் சந்தித்தார். எவ்வித அறிவிப்பும் இன்றி இந்த சந்திப்பு நடந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை விஜய் சந்தித்தார். 

விஜய்யின் அரசியல் ஆசையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சிதறடித்தார். ரசிகர்களுடன் தனியார் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாட விஜய் திட்டமிட, அந்த நிகழ்வையே ரத்து செய்ய வைத்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு விஜய்யின் தந்தை விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக்க முனைந்ததும், விஜய் அவர் மீது வழக்குப் போட்டதும் வரலாறு. இதனை வைத்து, விஜய்க்கு அரசியல் ஆசை இல்லை என்ற வாதத்தை சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் இல்லாமல் செய்தது.

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடலாம் என்று பச்சைக்கொடி காட்டினார் விஜய். சுமார் 161 பேர்கள் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டனர். இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். சதவீத அடிப்படையில் பார்த்தால் இது மாபெரும் வெற்றி. நாம் தமிழர் போன்ற பல அரசியல் கட்சிகள் இதில் நாலில் ஒரு பங்குகூட வெற்றி பெறவில்லை. விஜய்யின் பிரச்சாரமோ, ஆதரவு அறிக்கையோ இல்லாமல் இத்தனை பேரும் தங்களின் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றுள்ளனர்

Also read... ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் சுரேஷ் கோபி...?

நேற்று வெற்றி பெற்ற இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் சந்தித்தார். எவ்வித அறிவிப்பும் இன்றி இந்த சந்திப்பு நடந்தது. அப்போது வெற்றி பெற்றவர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது விஜய் பேசியவை என்ன என்பது இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ரஜினி தனது 25 ஆண்டுகால அரசியல் வருகை அறிவிப்பை சென்ற டிசம்பரோடு முடித்துக் கொண்ட நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த வெற்றியும், விஜய்யின் சந்திப்பும் ஊடகங்களை மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: