இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் விஜய்யின் ‘மெர்சல்’ - ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் விஜய்யின் ‘மெர்சல்’ - ரசிகர்கள் கொண்டாட்டம்!
  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெர்சல் திரைப்படம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதை இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்து கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் மெர்சல். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் வெற்றிமாறன், டாக்டர் மாறன் உள்ளிட்ட 3 தோற்றங்களில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் வசூலைக் குவித்து வெற்றிப்படமானது.

இந்நிலையில் இத்திரைப்படம் இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், மெர்சல் என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.


ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பார்வையாளர்களை தன் வசம் ஈர்க்க பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் முன்னணி நடிகர்களின் படங்களையும், ஏற்கெனவே ஹிட்டான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெர்சல் திரைப்படமும், சன் டிவியில் விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படமும், ஜெயா டிவியில் நடிகர் அஜித்தின் ஆரம்பம் திரைப்படமும் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒளிபரப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஊரடங்கு நாட்களிலும் தொடரும் அருண் விஜயின் 'சினம்' பட வேலைகள்!



First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading