Home /News /entertainment /

மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு..

மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு..

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்

மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்பாட்டில், மாவட்ட நிர்வாகிகள் விஜய் அலுவலகத்தில் காலை 10 மணியளவிலிருந்து காத்திருந்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய், தற்போது நடந்து வரும் அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே சென்னை பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரியவந்துள்ளது.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் அரசியல் கட்சியை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ளார். தலைவராக திருச்சி ஆர்.கே.ராஜா என்கிற பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சி பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிக்கு விஜய் சார்பில் மறுப்பும் எதிர்ப்பும் தெரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மக்களுக்கு நல்லது செய்ய விஜய் பெயரில் கட்சி தொடங்கியுள்ளேன். அதே நேரத்தில்  விஜயை சுற்றி கிரிமினல்கள் உள்ளனர்.  விஜய் விஷ வலையில் சிக்கியுள்ளார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது சென்னை  பனையூர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் திருச்சி, தஞ்சாவூர்,  கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களின் நிர்வாகிகளைச்  சந்தித்து ஆலோசனை நடத்தினார்.




மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்பாட்டில், மாவட்ட நிர்வாகிகள் விஜய் அலுவலகத்தில் காலை 10 மணியளவிலிருந்து காத்திருந்தனர்.  காலை 11 மணிக்கு மேல்  நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

தற்போது அரசியல் கள நிலவரம், எதிர்கால திட்டமிடல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும்எஸ்.ஏ.சி & மூத்த நிர்வாகிகளுக்கு  எதிரானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Gunavathy
First published:

Tags: Actor vijay, Sa chandrahekhar

அடுத்த செய்தி