விஜய் மட்டுமே தமிழகத்தில் ஷூட்டிங் நடத்துகிறார்... பாஜகவின் போராட்டம் முறையற்றது - ஆர்.கே.செல்வமணி

விஜய் மட்டுமே தமிழகத்தில் ஷூட்டிங் நடத்துகிறார்... பாஜகவின் போராட்டம் முறையற்றது - ஆர்.கே.செல்வமணி
ஆர்.கே.செல்வமணி
  • Share this:
முறையாக அனுமதி வாங்கி மாஸ்டர் படப்பிடிப்பு நடத்தப்படும் நிலையில் அங்கு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்றது என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஏ.ஆர்.முருகதாஸ் தனது வீட்டில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார். லாபம், நஷ்டம் என்பது தயாரிப்பாளர் அல்லது வினியோகஸ்தர்களையே சேரும். லாப நஷ்டத்தில் இயக்குநர் உட்பட தொழிலாளர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சிலர் பிரச்சினை செய்வது சரியல்ல என்றார்.


விநியோகஸ்தர்கள் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என எண்ணி, தங்கள் பலத்தால் அதிக பணம் கொடுத்து திரைப்படங்களை வாங்குவதே இத்தகைய பிரச்னைகளுக்கு காரணம். தொழிலாளர்களிடம் பிரச்னை செய்வதை சம்மேளம் வன்மையாகக் கண்டிக்கிறது. வலிமையுள்ளவன் ராஜ்ஜியம் செய்கிறான். தமிழ்நாட்டிற்கென்று திரைப்பட மேம்பாட்டு ஆணையம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும்.

அதேபோல திரையரங்கங்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதில் அரசு தலையிட வேண்டும். பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தாததால், கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் படப்பிப்பில் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டதால், தற்போது நடிகர் விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பில் பாஜகவினர் போராட்டம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. உச்ச நடிகர்களில், நடிகர் விஜய் மட்டுமே தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்துகிறார். பாஜகவுக்கு எதிராக போராட்டம் எதுவும் முன்னெடுக்கப் போவதில்லை. சினிமாவை சினிமாவாக விட்டு விடுங்கள். ஜோசப் விஜய், இப்ராஹிம், செல்வமணி யார் வேண்டுமானாலும் தமிழ் திரைப்படத்துறையில் வாழலாம்.மற்ற மாநிலங்கள் திரைத்துறையை ஆதரிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரைத்துறையை எதிரியாகப் பார்க்கிறார்கள்.இளையராஜா இந்தியாவின் வரப்பிரசாதம். அவருக்காகவும், தமிழ் சினிமாவுக்காகவும் பிரசாத் ஸ்டுடியோ பிரச்னையில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, அதனைப் பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தனது பேட்டியில் தெரிவித்தார்.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading