Exclusive | நெய்வேலியில் விஜய் செல்ஃபி திட்டமிட்டு எடுக்கப்பட்டதா? - ‘குட்டி ஸ்டோரி’ லோகி விளக்கம்!

Exclusive | நெய்வேலியில் விஜய் செல்ஃபி திட்டமிட்டு எடுக்கப்பட்டதா? - ‘குட்டி ஸ்டோரி’ லோகி விளக்கம்!
லோகி | விஜய் செல்ஃபி
  • Share this:
நெய்வேலியில் எடுக்கப்பட்ட விஜய்யின் செல்ஃபி புகைப்படம் திட்டமிட்டு எடுக்கப்பட்டதா என்பது குறித்து உதவி இயக்குநர் லோகி விளக்கமளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். மேலும் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது வருமானவரித்துறையினர் நடிகர் விஜய்யை வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது, ஷூட்டிங் ஸ்பாட்டில் பாஜகவினர் நடத்திய போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மாஸ்டர் பேசுபொருளானது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் தன்னைக் காண வந்த ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த ஒரு புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.




மேலும் அந்த செல்ஃபி சமீபத்தில் வெளியான அப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலிலும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அந்த செல்ஃபி புகைப்படம் திட்டமிட்டு எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பாடலில் பணியாற்றிய உதவி இயக்குநர் லோகி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து லோகி நம்மிடம் கூறுகையில், குட்டிக் கதை லிரீக் வீடியோ அமைய காரணமாக இருந்த அனிருத் மற்றும் நடிகர் விஜய்க்கு எனது முதல் நன்றி. வாழ்க்கைக்கு தேவையான அனைத்துமே அந்தப் பாடலில் இருக்கும். பாடல் வரிகளில் இருக்கும் எனர்ஜி எதிர்மறையான எண்ணங்களை அறவே ஒழிக்கும். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு எமோஜி பயன்படுத்தப்பட்டிருக்கும்.விஜய் பாடலைப் பார்த்ததும் பாராட்டினார். அது எனக்கு வாய்த்த மகிழ்ச்சியான தருணம். இந்தப் பாடலை உருவாக்க 12 நாட்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் 10 நாட்களில் பாடல் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பாடலில் செல்ஃபி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால் அது முன்கூட்டியே தற்செயலாக நடந்துவிட்டது. எனவே நெய்வேலியில் எடுக்கப்பட்ட செல்ஃபி திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல. மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பற்றி எனக்கு இப்போது எதுவும் தெரியாது” என்றார்.

மேலும் படிக்க: ஹேராம் படத்தில் பேசிய அச்சங்கள் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன - கமல்ஹாசன் வருத்தம்
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading