நெய்வேலிக்கு நன்றி... விஜய் வெளியிட்ட மாஸ்டர் செல்ஃபி... ட்ரெண்டிங்கில் டாப்!

நெய்வேலிக்கு நன்றி... விஜய் வெளியிட்ட மாஸ்டர் செல்ஃபி... ட்ரெண்டிங்கில் டாப்!
சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்பது குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வரும்நிலையில், இதன்பின்னர் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • Share this:
நேற்று மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்து திரும்பும் போது வேன் மேல் ஏறி எடுத்த செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெய்வேலி மக்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை கொண்டாடித் தீர்க்கும் அவரது ரசிகர்கள் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடிக்கச் செய்துள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடந்து வருகிறது. சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியது முதல் மாஸ்டர் களம் பரபரப்பானது.

அதைத்தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு முன்பாக ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்தனர். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்து திரும்பும் போது ரசிகர்களுக்கு கை அசைத்து காட்டி புறப்பட்டுச் சென்ற விஜய், நேற்று அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்டார். விஜய்யின் இந்த செயலை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் தான் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததால் அந்த செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெய்வேலிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே நடிகர் விஜய் விவகாரம் மக்களவையிலும் இன்று எதிரொலித்துள்ளது. மக்களவையில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், “ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமான வரித்துறை விஜயை மட்டும் குறி வைப்பது ஏன் தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை. தமிழ், தமிழ் என பேசும் மத்திய அரசு அதன் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. செத்தமொழியான சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” என்று பேசினார்.மேலும் படிக்க: மக்களவை வரை சென்ற விஜய் விவகாரம்
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading