வாத்தி கமிங்... மாஸ்டர் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாஸ்டர்
- News18 Tamil
- Last Updated: March 9, 2020, 7:33 PM IST
மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் பாடியிருந்த குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் இரண்டாவது பாடல் குறித்தான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‘மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் அடுத்த பட இயக்குநரை அறிவிக்கும் விஜய்?
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.
Students!! Vaathi is coming! 😉Master Second Single is releasing tomorrow at 5pm. #VaathiComing #MasterSecondSingle #Master@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ @andrea_jeremiah @gopiprasannaa pic.twitter.com/wVdTKkBnmA
— XB Film Creators (@XBFilmCreators) March 9, 2020