ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்துடன் இணைந்த விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்…

வாரிசு படத்துடன் இணைந்த விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்…

வாரிசு படத்தில் விஜய்

வாரிசு படத்தில் விஜய்

தெலுங்கு வட்டாரத்தில் வாரிசு தெலுங்கு பதிப்பை அதிக தியேட்டர்களில் வெளியிடுவதற்கு தெலுங்கு திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய்யின் வாரிசு படத்தின் வெளியீட்டில், அவரது மாஸ்டர் படத்தை தயாரித்த நிறுவனம் இணைந்துள்ளது.

    மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை தவிர்த்து மற்றவை படமாக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இந்த படத்தில் விஜய்யுடன் சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமன் இசையில் வெளியிடப்பட்டுள்ள ரஞ்சிதமே என்ற முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    வாரிசு படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரித்துள்ளார். தமிழில் வாரிசு என்றும், தெலுங்கில் வாரசுடு என்றும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தெலுங்கு வட்டாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதற்கு தெலுங்கு திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    விஜய்யின் வாரிசு பட சிக்கலுக்கு உதயநிதியை குற்றம்சாட்டும் முன்னாள் அமைச்சர்… உண்மை நிலவரம் என்ன?

    பண்டிகை காலங்களில் நேரடியாக தெலுங்கில் எடுக்கப்படும் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    வாரசுடு திரைப்படத்துடன் சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படங்கள் திரைக்கு வரவுள்ளன.

    நடிகை த்ரிஷாவை முத்தமிட்டு கொஞ்சும் குழந்தை.! க்யூட் வைரல் வீடியோ

    இதனால், அதிக தியேட்டர்களில் வாரசுடு படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தை வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், தியேட்டர்களுடன் ஒப்பந்த பணிகளை நிறைவு செய்திருக்கிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் வாரிசு வெளியாகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாரிசு படத்தை தமிழ் நாட்டில் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் நடிக்கவுள்ள அவரது 67ஆவது படத்தையும் இந்த நிறுவனமே தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் – அஜித் படங்கள் நேரடியாக பொங்கலுக்கு மோதுவதால் இவ்விரு படங்களின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay