மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை

Master IT Raid | Vijay |

மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை
விஜய்
  • Share this:
மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்த வருமானத்தை திரைப்படக் குழு வருமானவரித்துறையினரிடமிருந்து மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம், நடிகர் விஜய்யின் வீடு, பைனான்சியர் அன்புச் செழியனுக்குச் சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யை அவரது வீட்டுக்கு அழைத்து வந்து 24 மணி நேரத்துக்கும் அதிகமாக சோதனை நடத்தப்பட்டது.


இதைத்தொடர்ந்து வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, பைனான்சியர் அன்புச் செழியன் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இதனையடுத்து சைதாபேட்டையில் உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் மாஸ்டர் படம் எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது? அதில் யாருக்கெல்லாம் பங்கு கொடுக்கப்பட்டது? உள்ளிட்ட வரவு செலவு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்தமாதம் 15-ம் தேதி மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்படத்தின் இணைதயாரிப்பாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படிக்க: கமல்ஹாசனுடன் மீண்டும் இணையும் கவுதம் மேனன் - ‘வேட்டையாடு விளையாடு 2’ உருவாகிறதா?
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading