விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு சிம்பு கொடுத்த ரியாக்‌ஷன் - அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி!

விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு சிம்பு கொடுத்த ரியாக்‌ஷன் - அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி!
விஜய் | சிம்பு
  • Share this:
மாஸ்டர் பட பாடலைக் கேட்ட நடிகர் சிம்பு பாராட்டு தெரிவித்ததாக பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன் டிரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோடைவிடுமுறைக்கு திரைக்கு வர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ள படக்குழு, விஜய் தனது சொந்தக் குரலில் பாடியிருக்கும் குட்டி ஸ்டோரி பாடலை காதலர் தினத்தன்று வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைக்க அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.


ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் பாடல் யூடியூப் அதிக பார்வைகளைப் பெற்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் உலகளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பாடலைக் கேட்ட நடிகர் சிம்பு தன்னைப் பாராட்டியதாக பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த சிம்பு ரசிகர்களும் மாஸ்டர் சொல்லும் குட்டி ஸ்டோரியை பாராட்டி வருகின்றனர்.மேலும் படிக்க: பர்தா குறித்த சர்ச்சை... தஸ்லீமா நஸ்ரினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மகள் பதிலடி!
First published: February 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading