ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சாலையோர வாசிகளுக்கு போர்வை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

சாலையோர வாசிகளுக்கு போர்வை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

விஜய் மக்கள் இயக்கத்தினர்

விஜய் மக்கள் இயக்கத்தினர்

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக போர்வை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை புறநகரில் சாலையோரம் வசிக்கும்  80 பேருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் போர்வை வழங்கி உதவியுள்ளனர். 

தமிழகத்தில் நடிகர் விஜய் பெயரில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது.  அதன் மூலமாக மக்களுக்கு சில நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் இறுதியாக நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்த போதும் நலத்திட்ட உதவிகள் குறித்து அவர்களிடம் பேசியிருந்தார். இந்த நிலையில் சென்னை புறநகர் மாவட்டத்தின் சார்பில் அந்தப் பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இலவசமாக போர்வை வழங்கியுள்ளனர். சுமார் 80 பேருக்கு உதவியுள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்... தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்

தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள அதன் காரணமாக இந்த போர்வை அவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay